விக்ரமை விட தளபதி 67 உக்கிரமாக இருக்கும்.. லோகேஷ் செய்யப்போகும் வேற லெவல் சம்பவம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அப்போது கொரோனா அச்சம் காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத அனுமதி மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் மாஸ்டர் படம் தான் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய நடிகரின் படமாக திரையரங்குகளில் வெளியானது.

மேலும், மாஸ்டர் படம் வெளியாகி விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதைத்தொடர்ந்து விஜய், நெல்சன் உடன் பீஸ்ட் படத்தில் நடிக்கத் தொடங்கினார். ஆனால் இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதேபோல் லோகேஷ் கனகராஜ் உலக நாயகன் கமலஹாசனின் விக்ரம் படத்தை இயக்கியுள்ளார்.

கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில் ஜூன் 3 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் மீண்டும் விஜயுடன் இணைந்து தளபதி 67 படத்தை இயக்க உள்ளார்.

இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு முன்னதாக தற்போது வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் தளபதி 67 படம் தொடங்கயுள்ளது. இப்படத்தின் கதையை ரெடி செய்துள்ள லோகேஷ் 60 நாட்களில் படத்தை முழுவதுமாக எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

இந்நிலையில் மாஸ்டர் மற்றும் விக்ரம் படத்தின் வசனம் எழுதிய இயக்குனர் ரத்னகுமார் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அதில் விக்ரம் படம் ரிலீசுக்கு பிறகு தளபதி படம் எந்த மாதிரியான கதைகள் அதை கொண்டிருக்கும் என ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

மேலும் மாஸ்டர் படத்தை தொடர்ந்து அதே கூட்டணி இணைவதால் அதற்கு கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும். மேலும் விக்ரம் படத்தை விட தளபதி 67 படம் உக்கிரமாக இருக்கும் ரத்ன குமார் கூறியுள்ளார். இந்தப் பேட்டியைப் பார்த்த விஜய் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்