fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மவுசு குறைந்த தளபதி 66.. ஏன்னா லோகேஷ் செஞ்ச வேலை அப்படி

vijay-lokesh

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மவுசு குறைந்த தளபதி 66.. ஏன்னா லோகேஷ் செஞ்ச வேலை அப்படி

விக்ரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது சர்வதேச அளவில் டிரெண்டாகி இருக்கிறார். கமல்ஹாசன் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த இந்தத் திரைப்படம் தற்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதற்கு கமல் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பு காரணமாக இருந்தாலும், முக்கிய காரணமாக இருப்பது லோகேஷ் கனகராஜ் தான். இப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கவனமாக தேர்வு செய்திருக்கும் அவருடைய திறமை தற்போது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இவருடைய அடுத்த திரைப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விக்ரம் திரைப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் அடுத்ததாக விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இது குறித்த தகவலை அவர் சில நாட்களுக்கு முன்பு மீடியாவில் கூறினார்.

மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது. இதன் காரணமாக தற்போது விஜய் நடித்துக்கொண்டிருக்கும் தளபதி 66 திரைப்படத்தின் சுவாரஸ்யம் சிறிதளவு குறைந்துள்ளது.

பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் அந்த திரைப்படம் விக்ரம் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பு பலருக்கும் பரபரப்பு ஏற்படுத்தும் செய்தியாக இருந்தது. ஆனால் இப்போது லோகேஷ் கனகராஜ் அதை எல்லாம் மறக்கும் அளவுக்கு செய்துவிட்டார்.

இதனால் ரசிகர்கள் தற்போது லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியின் திரைப்படத்தை தான் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் தளபதி 66 படத்தின் டைட்டிலை வெளியிட்டு படம் பற்றிய ஆவலை தூண்டும் முயற்சியில் தற்போது இப்படக்குழு இறங்கியுள்ளது.

மேலும் படத்திற்கு வாரிசு என்ற தலைப்பை வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவர இருக்கிறது. அந்த வகையில் விஜய்யின் பிறந்த நாளன்று ரசிகர்களுக்கான சர்ப்ரைஸாக இந்த தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
To Top