ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

தளபதி66 முதல் சிங்கிள் பாடியுள்ள விஜய் டிவி பிரபலம்.. அனல் பறக்கும் அப்டேட்

தளபதி விஜய்யின் நடிப்பில் சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்குகிறார். பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஷூட்டிங்கை தளபதி விஜய் சமீபத்தில் முடித்திருந்தார். மேலும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் படு வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் தளபதி 66.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இந்தப் படத்தை தோழா படத்தை இயக்கிய வம்சி இயக்குகிறார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்திற்கான முதல் பாடல் தமனின் ஸ்டுடியோவில் நடக்கிறது.

இந்த பாடல் ரெக்கார்டிங்கில் தளபதி விஜய் நேரடியாக கலந்து கொண்டுள்ளார். இந்த பாடலை விஜய் டிவியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஜோடி பாடுகிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளனர்.

அதில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாக இருக்கும் புஷ்பா படத்தில் சாமி சாமி என்ற பாடலை ராஜலட்சுமி பாடியிருந்தார். இந்தப் பாடலில் ராஜலட்சுமியின் குரலைக் கேட்ட தமன் தளபதி 66 படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு அளித்துள்ளார்.

மேலும் அவருடைய கணவர் செந்திலும் இந்த படத்தில் ராஜலட்சுமி உடன் இணைந்து பாடுகிறார். இயக்குனர் இப்படத்தை வரும் மார்ச் மாதம் தொடங்கி வேகமாக முடிக்க திட்டமிட்டுள்ளார்.

அடுத்த வருடம் தீபாவளிக்கு தளபதி 66 வெளியாக உள்ளது. நடிகர் விஜய் முதன் முதலில் தெலுங்கில் நேரடியாக நடிக்க இருப்பதால் ரசிகர்களிடையே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது இதுபற்றிய அறிவிப்பை படக்குழு விரைவில் அறிவிக்கும்.

- Advertisement -spot_img

Trending News