தளபதி 66 அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது.? விஜய் பிறந்த நாளுக்கு டபுள் ட்ரீட்!

மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பின் நெல்சன் இயக்கத்தில் தளபதியின் 65 வது படம் உருவாகிக் கொண்டிருக்கின்றது. நாளை தளபதியின் பிறந்த நாள் என்பதால் இன்று இந்த படத்தின் டைட்டில் வெளிவரும் என்று சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக ப்ரோமோ ஒன்றை வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து தற்போது தளபதியின் அடுத்த படத்தின் அப்டேட் வந்த வண்ணம் உள்ளது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு படத்தை தயாரிக்க, வம்சி பைடிபள்ளி இந்த படத்தை இயக்க போகிறாராம். இப்படம் விஜய்யின் 66வது படமாக அமைய உள்ளது.

ஏற்கனவே இந்தப் படத்தைப் பற்றிய பேச்சுவார்த்தை நடைபெற்று சுமூகமாக முடிந்து உள்ளதாம். இதனால் தளபதி விஜய் நெல்சன் இயக்கும் படத்தை முடித்துவிட்டு விரைவில் இந்த படத்தில் நடிக்க உள்ளாராம்.

நாளை தளபதியின் பிறந்த நாள் என்பதால் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வலிமை படத்தின் அப்டேட் எதுவுமே இல்லாத சூழ்நிலையில் அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றும் விதமாக தளபதியின் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் இந்த பிறந்தநாள் அமையும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக தெலுங்கு படத்தில் நடிக்காத விஜய் முதல் முறையாக தெலுங்கு தயாரிப்பில், தெலுங்கு பட இயக்குனருடன் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ளது தளபதி 66 படம்.

vijay-vamsi paidipally-thalapathy66
vijay-vamsi paidipally-thalapathy66

இதனால் தளபதியின் பிறந்த நாளை இன்று முதலே கொண்டாட தயாராகி விட்டனர் விஜய் ரசிகர்கள். இதைத்தவிர தளபதியின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளிவருமா என்று காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்