fbpx
Connect with us

விஜய்க்கு சசிகுமார் சொன்ன கதை.. தலைவா இத்தனை நாள் எங்க இருந்திங்க என மெர்சலான தளபதி

vijay-66

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்க்கு சசிகுமார் சொன்ன கதை.. தலைவா இத்தனை நாள் எங்க இருந்திங்க என மெர்சலான தளபதி

தளபதி விஜய்யின் மாஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் மாஸ்டர் படத்தை முடித்து அடுத்த மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிக சிறப்பாக முடிந்தது தற்போது ட்ரெய்லர் எப்ப வரும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இது ஒரு புறமிருக்க தளபதி தனது அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் நடிக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் செய்திகள் வெளிவந்தன. இது 90% உறுதியாகிவிட்டது பின்னர் தளபதியை வைத்து இயக்குவதற்கு இயக்குனர்கள் இடையே பெரும் போட்டி நிலவி வருகிறது.

அதாவது கிட்டத்தட்ட ஆறு படங்களை முடித்துவிட்டு ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கும் சசிகுமார் தளபதி விஜய்யை வைத்து இயக்கப் உள்ளாராம். வெகுநாட்களாக சசிகுமார் இயக்கப் போவதாக கூறியிருந்தார்,  தளபதிகான கதையை அவரிடம் கூறி முன்னதாகவே சம்மதம் வாங்கி உள்ளார் ஆனால் ஒரு சில காரணங்களுக்காக அது தடைபட்டுள்ளது.

தற்போது சசிகுமாரை பார்க்க செல்லும் இயக்குனர்களிடம் தான் நடிக்கவில்லை என்றும் தளபதியை வைத்து இயக்கப் போகிறேன் என்று தெரிவித்துள்ளாராம்.

இதற்கு இடையில் அன்புத்தம்பி என்று அழைக்கப்படும் அட்லி அல்லது லோகேஷ் கனகராஜுடன் தளபதி விஜய் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக மகிழ்திருமேனி இயக்குனருடன் இணைந்து கிட்டத்தட்ட பிராஜக்ட் உறுதி செய்யப்பட்டு எடுப்பதாக இருந்த படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.

அந்த படம் கூட தளபதி விஜயின் 66வது லிஸ்டில் உள்ளதாம் கிட்டதட்ட 4 முதல் 5 இயக்குனர்கள் போட்டி போட்டு கொண்டு இருக்கின்றனர். இதில் தளபதி யாரை உறுதி செய்யப் போகிறாரோ என்பது அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் தெரியும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top