விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் தளபதி 65 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் மட்டுமே முடிவடைந்த நிலையில் அடுத்தடுத்த படப்பிடிப்புகள் எப்போது என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
தற்போது ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் படப்பிடிப்புகளை தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது எல்லாம் முடிந்து மீண்டும் பழையபடி படப்பிடிப்புகளை தொடங்க இன்னும் சில வாரங்கள் ஆகும் எனவும் தெரிகிறது.
இதற்கிடையில் விஜய் தளபதி 66 படத்திற்கான கதைகளை கேட்டு வருவதாகவும் ஒரு பக்கம் தகவல்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் விஜய் தரப்பிலிருந்து இதை முற்றிலும் மறுத்தனர். மேலும் தளபதி 66 படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், அந்த படத்தை மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியானது.
ஆனால் தற்போது தளபதி 66 படத்தின் இயக்குனர் யார் என்பது தெள்ளத்தெளிவாக முடிவாகிவிட்டது. தெலுங்கு சினிமாவின் மாஸ் இயக்குனர் வம்சி பைடிபல்லி என்பவர்தான் தளபதி 66 படத்தை இயக்க உள்ளாராம்.
மேலும் தெலுங்கு சினிமாவின் மிகப் பெரிய தயாரிப்பாளர் தில் ராஜூ இந்த படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளாராம். தன்னுடைய கேரியரில் மிகப்பெரிய பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படம் எனவும் இயக்குனர் வம்சி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் விஜய்யை சந்தித்து கதை சொன்னதாகவும், அந்த கதை அவருக்கு மிகவும் பிடித்து போனதால் உடனடியாக இந்த படத்தை செய்யலாம் என வாக்கு கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய தளபதி 66 படத்தின் மூலம் மார்க்கெட்டை விரிவுபடுத்த விஜய் செம ஐடியா போட்டுள்ளார் என தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.