
விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் தளபதி 65 படத்திற்கு விஜய்யின் மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜால் புதிய சிக்கல் உருவாகியது தயாரிப்பு நிறுவனத்தை சங்கடப்பட வைத்துள்ளது.
விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் மாஸ்டர். கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதிலும் வசூலில் எந்த ஒரு குறையும் வைக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கும் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் தன்னுடைய குருநாதர் கமலஹாசனை வைத்து விக்ரம் எனும் படத்தை எடுத்து வருகிறார்.
விக்ரம் படம் கடந்த தமிழ் புத்தாண்டுக்கே வெளியாக வேண்டிய திரைப்படம். ஆனால் கமலஹாசன் தேர்தலில் பிஸியாக இருந்ததால் தற்போதுதான் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளன.
ஆரம்பிக்கும்போதே விஜய்க்கு சங்கடத்தை கொடுத்துவிட்டதாம் விக்ரம் படக்குழு. விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகும் தளபதி 65 படத்தை 2022 பொங்கல் வெளியீடாக கொண்டுவரலாம் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஆனால் தற்போது அதே தேதியில் லோகேஷ் மற்றும் கமல் கூட்டணியில் உருவாகும் விக்ரம் படமும் வெளியாகும் என தெரிகிறது. ஒருவேளை இந்தக் கொரானா பிரச்சனை தொடர்ந்தால் விஜய்யின் தளபதி 65 படம் 2022 தமிழ் புத்தாண்டு வெளியீடாக வருவதற்கும் வாய்ப்பிருக்கிறதாம்.
