fbpx
Connect with us

இரண்டு இயக்குனர்களில் யாரை ஓகே செய்வார் விஜய்- அதீத எதிர்பார்ப்பில் கோலிவுட்

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema Kisu Kisu

இரண்டு இயக்குனர்களில் யாரை ஓகே செய்வார் விஜய்- அதீத எதிர்பார்ப்பில் கோலிவுட்

கோலிவுட்டில் வசூல் சக்ரவர்த்தியாக இருப்பவர் தளபதி விஜய். ரசிகர் வட்டம் அதிகம் உள்ள நபர். இவர் படம் பற்றிய அப்டேட் வராதா என ஏங்கி கொண்டே இருப்பார்கள். இவரது படத்தை பற்றியது சிறிய வதந்தியாகவே இருப்பினும், அதுவும் வைரல் ஆகி விடும்.

தளபதி விஜய் மாஸ்டர் முடித்துவிட்டு ரிலீசுக்காக வைட்டிங். விஜய்யின் அடுத்த படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கப்போவது சன் பிக்ச்சர்ஸ். ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. ஆனால் நம் கோலிவுட் பட்சிகள் பல இயக்குனர்களை சொல்லி வருகின்றனர்.

thalapathy 65

துப்பாக்கி, கத்தி, சர்க்கார் தொடர்ந்து நான்காவது முறையாக விஜய் ஏ ஆர் முருகதாஸுடன் இணையப்போவதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த ப்ரொஜெக்டில் இருந்து அவர் விலகிவிட்டார். சரியான காரணம் தெரியவில்லை.

இயக்குனர் பாண்டி ராஜ் சன் பிக்ச்சர்ஸ் பாணரில் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தை எடுத்தார். அவரின் ஒர்கிங் ஸ்டைல் பிடித்துவிட அடுத்த படத்துக்கும் கமிட் செய்தனர் சன் குழுமம். இவர் தான் விஜய்யின் அடுத்த இயக்குனர் என சொல்லப்பட்ட நேரத்தில் நேற்று சூர்யா 40 அறிவிப்பு வெளியானது.

தற்பொழுது கிசு கிசுக்கப்படுவது என்னவெனில்…

perarasu- magizh thirumeni

செல்வராகவன், கவுதம் மேனனின் அசிஸ்டன்ட்டாக இருந்தவர் மகிழ் திருமேனி. தடையர தாக்க, மீகாமன், தடம் படங்களை இயக்கியவர். இவர் முன்பே விஜய்க்கு ஒரு கதையை சொல்லியுள்ளார். இவர் மட்டுமன்றி திருப்பாச்சி, சிவகாசி படங்களை இயக்கிய பேரரரசுவும் ஒரு கதை சொல்லியுள்ளாராம் விஜய்யிடம்.

ஒருவர் ஸ்டைலிஷ் கேங்ஸ்டர் படம் எடுப்பவர், மற்றவர் லோக்கல் கமெர்ஷியல் படம் தருபவர். இந்த இருவரில் யாரை தளபதி விஜய் ஓகே சொல்வர் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Continue Reading
To Top