Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி 65 அஜித்துக்காக ரெடியான கதையாம் – ஏன் இயக்குனரே இப்படி என கேட்கும் ரசிகர்கள்
இன்று நமது கோலிவுட்டில் மாஸ் மகாராஜாக்கள் தளபதி விஜய் மற்றும் தல அஜித். ரசிகர் வட்டம் அதிகம் உள்ள நபர்கள். இவர்களின் படம் பற்றிய அப்டேட் வராதா என ஏங்கி கொண்டே இருப்பார்கள். தல அஜித் வினோத் இயக்கத்தில் வலிமை படம் கை வசம் வைத்துள்ளார். விஜய் மாஸ்டர் முடித்துவிட்டு ரிலீஸ் பற்றி யோசித்து வருகிறார். விஜய்யின் அடுத்த படம் என்ன என்பது பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
கோலிவுட் பட்சிகள் சொல்வது தளபதி 65 ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தான் என்கின்றனர். துப்பாக்கி, கத்தி, சர்க்கார் தொடர்ந்து நான்காவது முறையாக இணையப்போகின்றனர். இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கப்போவது சான் பிக்ச்சர்ஸ் தானாம். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் நடைபெறவிருக்கிறது என்கின்றனர்.

vijay-murugadoss-next-movie-2020
ஆனால் இன்று தளபதி நடிக்க போக்கும் இப்படத்தின் கதையை இயக்குனர் முருகதாஸ் அஜித் அவர்களுக்காக ரெடி செய்த படம் என கிசு கிசுகின்றனர் ஒரு சிலர். சில வருடங்களுக்கு முன் இரட்டை வேடத்தில் அஜித் நடிக்க, ‘ ரெட்ட தல ‘ என்று தலைப்பும் வைத்திருந்தாராம் முருகதாஸ். அந்த சமயத்தில் ஆஸ்கர் ரவிச்சந்திரன் இப்படத்தை தயாரிப்பதாகவும் இருந்ததாம்.
சம்பள விஷய குளறுபடி என சிலர் சொல்ல, அஜித்துக்கு கதை அவ்வளவாக பிடிக்கவில்லை என வேறு சிலர் பேசினர். அந்த நேரத்தில் காரணம் தெரியாமல் ட்ராப் ஆன ப்ரொஜெக்ட் இதுவாம். அதே கதையில் சில மாற்றங்களை செய்து, தளபதி விஜய்க்கும் இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்றது போல தயார் செய்துள்ளாராம் இயக்குனர். எனினும் டைட்டில் என்னவாக இருக்கும் என்பதே பலரது கேள்வி.
காத்திருப்போம் அதிகாரபூர்வ அறிவிப்புக்காக.
