முருகதாஸிடம் இருந்து தளபதி 65 வாய்ப்பை தட்டி தூக்கிய இயக்குனர் யார் தெரியுமா? அப்போ வில்லேஜ் கலாட்டா தான்

இன்று நமது கோலிவுட்டில் மாஸ் மகாராஜா தளபதி விஜய். ரசிகர் வட்டம் அதிகம் உள்ள நபர். இவர் படம் பற்றிய அப்டேட் வராதா என ஏங்கி கொண்டே இருப்பார்கள். தளபதி விஜய் மாஸ்டர் முடித்துவிட்டு ரிலீஸ் பற்றி யோசித்து வருகிறார். விஜய்யின் அடுத்த படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கப்போவது சன் பிக்ச்சர்ஸ் தானாம். ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.

vijay-murugadass
vijay-murugadass

துப்பாக்கி, கத்தி, சர்க்கார் தொடர்ந்து நான்காவது முறையாக விஜய் ஏ ஆர் முருகதாஸுடன் இணையப்போவதாக கோலிவுட்டில் சொல்லப்பட்டது. மேலும் இப்படம் தல அஜித்துக்காக ரெடியான கதை என்றும் சொல்லப்பட்டது. சில வருடங்களுக்கு முன் இரட்டை வேடத்தில் அஜித் நடிக்க, ‘ ரெட்ட தல ‘ என்று தலைப்பும் வைத்திருந்தாராம் முருகதாஸ். அந்த சமயத்தில் ஆஸ்கர் ரவிச்சந்திரன் இப்படத்தை தயாரிப்பதாகவும் இருந்ததாம். அதே கதையில் சில மாற்றங்களை செய்து, தளபதி விஜய்க்கும் இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்றது போல தயார் செய்து விட்டார் என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் முருகதாசுக்கும் சன் பிக்சர்ஸுக்கும் சர்க்கார் படத்தில் ஏற்பட்ட சில பிரச்சனை தான் தற்போது அவர் விலக காரணம் என்று கூறுகிறார்கள். ஆனால் வேறு சிலரோ விஜய்க்கு கதையில் சில விஷயங்கள் பிடிக்கவில்லை என்கின்றனர்.

எது எப்படியோ இந்த படம் ட்ராப் ஆனதால் விஜய் படத்தை இயக்கம் வாய்ப்பு பாண்டி ராஜ் வசம் செல்கிறதாம்.

Pandiraj-Associate Directors

இதே சன் பிக்ச்சர்ஸ் பாணரில் அவர் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தை எடுத்தார். அவரின் ஒர்கிங் ஸ்டைல் பிடித்துவிட்டதாம். பாண்டியராஜும் தளபதி ஏற்ற கதை வைத்துள்ளாராம்.

ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகின்றதாம். அட காத்திருப்போம் மக்களே பொறுமையாக.