Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாஸ்டர் படமே இப்பவோ, அப்பவோ இழுத்துட்டு இருக்கு.. இதுல தளபதி65 வேறயா.?
தளபதியின் மாஸ்டர் திரைப்படம் வெளிவருவதற்கு திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், அடுத்து தளபதி 65வது படத்தின் படப்பிடிப்பு எப்போது என்ற செய்தி மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தமன்னாவுடன் ஜோடி போட இருக்கும் தளபதி விஜயின் அடுத்த படம் 2021 பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாகவும், இதற்கான பட பூஜை தேதி விரைவில் அறிவிக்கப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ள முருகதாஸுக்கு, தமிழ் சினிமாவில் இது முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது. தளபதியுடன் கூட்டணியில் வெற்றி பெற்ற அதிர்ஷ்டம் இந்த படத்திற்கும் கை கொடுக்குமா என்பது கேள்விக்குறி தான்.
உண்மையிலேயே அனைவரும் எதிர்பார்த்தது விஜய் மற்றும் மகிழ்திருமேனி கூட்டணியை தான். அதுவும் இல்லையென்றால் விஜய் பாண்டிராஜ் கூட்டணி தான் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.
இசையமைப்பாளர் தமன் என்றவுடன் ஆகா என்ற ரசிகர்கள் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போகும் தமன்னா என்றவுடன் அய்யோ என தலையில் கை வைத்து விட்டார்கள். ஏற்கனவே விஜய் தமன்னா கூட்டணியில் உருவாகி மோசமான தோல்வியை சந்தித்த படம் சுறா என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்திற்குள் என்ன வேணாலும் நடக்கலாம், இதில் இயக்குனர்கள் மற்றும் கதாநாயகியின் மாற்றங்கள் நடைபெற்றால் ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடுவார்கள் என்பது தான் உண்மை.
