Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி65 படத்தை நோட்டமிடும் அரசியல்வாதிகள்.. தேரை இழுத்து தெருவுல விடாதீங்க என முருகதாசை எச்சரித்த விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் இளையதளபதி விஜயின் படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைக்கும். தளபதியின் 65 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, விஜய்யின் லக்கி இயக்குனரான ஏ.ஆர். முருகதாஸ் இயக்க விருக்கிறார்.
ஏற்கனவே விஜய், ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் கத்தி, சர்க்கார் போன்ற படங்களில் அரசின் நிர்வாகத்தை குறித்த, சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்றதால் இந்தப் படங்கள் வெளிவருவதற்கு படாத பாடுபட்டது.
இருந்த போதிலும் ரசிகர்களின் மத்தியில் இந்தப்படங்களுக்கு நல்ல வரவேற்பே கிடைத்தது. விஜய், ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைவதால் அரசு குறித்து சர்ச்சைக்குரிய வசனங்கள் ஏதாவது இந்த படத்திலும் இடம் தெரிகிறதா? என்று மத்திய மாநில அரசின் உளவுத்துறை விஜய்யின் 65-வது படத்தை நோட்டம் விடுவதாக தெரிகிறது.
இதை அறிந்த இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் வீம்புகாகவே, இந்தப்படத்திலும் அரசாங்கத்தை விமர்சிக்க தயாராகிவிட்டார். இயக்குனரின் இந்த முடிவை அறிந்த விஜய் கொஞ்சம் உஷாராக காய்நகர்த்தி வருகிறார்.
இந்தப்படத்தில் சர்ச்சைக்குரிய எந்த வசனமும் இடம்பெறக்கூடாது என்று விஜய் இயக்குனரிடம் எச்சரித்த உள்ளார். அதனால் தான் இந்த படத்திற்கான முழு அறிவிப்பும் வெளிவருவதற்கு தாமதமாகிறது.
ரசிகர்களைப் பொறுத்தவரை விஜயின் 65வது படம் எப்போ வெளியாகும் என்ற ஆர்வத்துடன் ஒவ்வொரு நாளும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
