fbpx
Connect with us

Cinemapettai

விட்ட குறை தொட்ட குறையாக 9 வருடம் கழித்து விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை.. தளபதி 65 மாஸ் அப்டேட்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விட்ட குறை தொட்ட குறையாக 9 வருடம் கழித்து விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை.. தளபதி 65 மாஸ் அப்டேட்

கொரோனாவின் அச்சுறுத்தல் இருப்பதால் தளபதியின் மாஸ்டர் படம் வரும் பொங்கலுக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தளபதியின் அடுத்த படமான 65வது படத்தின் அப்டேட் வைரலாகி வருகின்றனர்.

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதியின் அடுத்த படம் விரைவில் எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். இந்த படத்திற்காக நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதுவரை 4 நடிகைகளை தேர்வு செய்துள்ளனர் பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால், ராஷ்மிகா மந்தனா என்பதுதான் நமக்குத் தெரியும் இவர்கள் வரிசையில் தற்போது அசினும் இணைந்துள்ளார்.

அதாவது திருப்பாச்சி, சிவகாசி போன்ற படங்களில் தளபதியுடன் நடித்து வெற்றி கண்ட அசின் 9 வருடம் கழித்து மீண்டும் தளபதியுடன் இணைய போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

எந்த வாய்ப்பும் இல்லாத சூழ்நிலையில் எப்படி தளபதியுடன் இணைய முடியும் என்று கேள்வி எழும்பி உள்ளது. ஆனால் தளபதிக்கு ஏதோ விட்ட குறை தொட்ட குறை இருப்பது போன்றும் அசினை மீண்டும் படத்தில் நடிக்க வைக்கப் போவதாகவும் கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர் கணவர் ஒரு மொபைல் கம்பனியே வைத்துள்ளார். அவரிடம் இல்லாத பணமா? கோடீஸ்வர வீட்டு மருமகளுக்கு பணம் பெரிதல்ல அதனால் அவர் ஓகே சொல்வாரா என்று பார்க்கலாம்.

Continue Reading
To Top