fbpx
Connect with us

Cinemapettai

வெற்றிமாறனும் இல்ல முருகதாசும் இல்லை.. சைக்கிள் கேப்பில் விஜய் படத்தை தூக்கிய வில்லேஜ் டைரக்டர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெற்றிமாறனும் இல்ல முருகதாசும் இல்லை.. சைக்கிள் கேப்பில் விஜய் படத்தை தூக்கிய வில்லேஜ் டைரக்டர்

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை கோடை கொண்டாட்டமாக திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய்யின் தளபதி65 படத்துக்கான இயக்குனர் யார் என்பதை தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் ஏற்கனவே அடுத்த படத்தை வெற்றிமாறன், முருகதாஸ், அட்லி, லோகேஷ் கனகராஜ், மகிழ்திருமேனி, எவரேனும் இயக்கப் போகிறார்கள் என்ற செய்திகள் பரவி வருகின்றன.

கிட்டத்தட்ட தளபதியின் அடுத்த படத்தை தயாரிக்கப் போவது சன் பிக்சர்ஸ் தான் என்பது உறுதியாகியுள்ளது. இதனால் சன் பிக்சர்ஸின் நம்பிக்கைக்குரிய இயக்குனராக மாறியுள்ள பாண்டிராஜ் தளபதியின் அடுத்த படத்தை இயக்குவதற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

கடைசியாக இவர் இயக்கிய கடைக்குட்டி சிங்கம் நம்ம வீட்டு பிள்ளை ஆகிய இரண்டு படங்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்த தீபாவளிக்கு படத்தை கொண்டு வருவதில் தளபதி விஜய் உறுதியாக உள்ளாராம். இதனால் சன் பிக்சர்ஸ் பாண்டிராஜை தளபதி விஜய்க்கு கதை சொல்ல அனுப்பி உள்ளனர்.
தளபதி விஜய்யும் கிராமத்து கதைகளில் நடித்து நீண்ட காலம் ஆகிவிட்டதால் பாண்டியராஜுக்கு ஓகே சொல்லிவிட்டதாக தெரிகிறது.

பொங்கலன்று தளபதி 65 படத்தை இயக்கப்போவது பாண்டிராஜ் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன. நாங்களும் தளபதியே வேட்டி சட்டையோட பார்க்க வெறித்தனமாக வெயிட் பண்றோம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top