உலக சினிமா வட்டாரங்களை பொருத்தவரையில் வசூல் ரீதியாக விஜய்யை விட கொஞ்சம் உயரத்தில் உள்ளார் பிரபாஸ். இருந்தாலும் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.
விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 படம் உருவாகி வருகிறது. நெல்சன் இயக்கும் இந்தப் படத்தை இதுவரை இல்லாத அளவுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது.
மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இணைந்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது.
அதைப்போல் பிரபாஸ் நடிப்பில் கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் சலார். பிரமாண்ட ஆக்ஷன் படமாக உருவாகும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.
இந்த இரண்டு படங்களிலும் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் என்பவருக்கு வாய்ப்பு வந்துள்ளதாம். இதனால் எந்தப் படத்தை ஒப்புக் கொள்வது என குழப்பத்தில் உள்ளாராம்.
மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் பெயர் பாலிவுட் சினிமாவில் அதிகமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதேபோல் பிரபாஸ் ஏற்கனவே பாகுபலி படங்களின் மூலம் உச்சத்தை தொட்டு விட்டார். இந்நிலையில் இரண்டு படங்களுக்கும் தேதிகள் ஒத்து வந்தால் இரண்டு படங்களிலும் நடித்து விட வேண்டியதுதான் என முடிவு செய்துள்ளாராம். இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.