Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி 64 – விஜய்யுடன் நடிக்க போகும் பிரபல பாடகி.. நடிகை!
அட்லி இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்த விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
பேராசிரியர் கதாபாத்திரத்தில் விஜய் நடித்து வருவதாக சொல்கிறார்கள். நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராவதாகவும் தகவல்கள் பரவி வந்தது. ஆனால் இதனை படக்குழு உறுதிபடுத்தவில்லை.
இப்படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இன்னொரு நாயகியாக ஆண்ட்ரியா நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை கவுரி கிஷானையும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.
இது குறித்து கவுரி கூறுகையில், “விஜய்யுடன் நடிப்பது மகிழ்ச்சி. அனைவருடைய ஆசீர்வாதத்தால் இதில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது” என்றார்.
விஜய் சேதுபதி-திரிஷா நடித்த ‘96’ படத்தில் இளம்வயது திரிஷா கதாபாத்திரத்தில் நடித்து கவுரி பிரபலமானவர். இதனிடையே பகல் நிலவு தொடரில் நடித்து பிரபலமான சவுந்தர்யா நந்தகுமாரும் நடக்க ஒப்பந்தமாகி உள்ளார். விஜய் டி.வியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பாடகியாக சின்னத்திரைக்கு வந்தவர் தான் சவுந்தர்யா.
