Tamil Cinema News | சினிமா செய்திகள்
லீக் ஆன தளபதி 64 படத்தின் கதை.. அட! கதை வேற மாதிரி இருக்கே
தளபதி விஜய் தற்போது மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிக்கும் தளபதி விஜய்யின் புகைப்படங்கள் படப்பிடிப்பு தளத்திலிருந்து ரசிகர்களால் அடிக்கடி கசிந்து வருகிறது. அதில் தளபதி விஜய் ஐடி கார்டு போட்டுக்கொண்டு கல்லூரி மாணவரை போல் காட்சியளிக்கிறார்.
ஆனால் தளபதி 64 படத்தின் கதை உண்மை சம்பவம் ஒன்றை அடிப்படையாக கொண்டுள்ளது. அதாவது நீட் தேர்வில் உயிரைவிட்ட அனிதா சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. அந்த உண்மையை அடிப்படையாகக்கொண்டு நமது நாட்டின் கல்விமுறை பற்றிய நிலைமைகளுக்கு சாட்டையடி கொடுக்கும் கல்லூரி பேராசிரியராக தளபதி விஜய் நடிக்கிறார்.
தளபதி விஜய்யுடன் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஆகா கல்யாணம் புகழ் பிரிகிதா, 96 புகழ் கௌரி போன்றோர் நடித்து வருகின்றனர். தளபதி விஜய் மீண்டும் அரசியல் சம்பந்தப்பட்ட கதையை கையில் எடுத்திருப்பதால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
காரணம் மாநகரம், கைதி போன்ற சுறுசுறுப்பான கதைகளை இயக்கிய லோகேஷ் கனகராஜ் ஏன் இப்படி ஒரு கதையை இயக்குகிறார் என தளபதி ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் வட்டாரங்களில் சற்று அதிருப்தி அடைந்துள்ளனர்.
