Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் வீட்டை அலசிய வருமான வரித்துறை.. மாஸ்டரை பாதியில் நிறுத்திட்டு ஓடிவந்த தளபதி
தளபதியின் மாஸ்டர் படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது 3-வது கட்ட படப்பிடிப்பை நெய்வேலியில் நடத்தி வந்தார்.
இந்த படத்தின் வெறித்தனமான போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் ஆதரவைப் பெற்று வந்தது. அதுமட்டுமல்லாமல் வரும் ஏப்ரல் மாதம் வெளிவரும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கு முக்கிய காரணமாக பிகில் படத்தில் 300 கோடி வசூல் ஆனதால் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தில் சோதனை நடைபெற்று உள்ளது. அதன் தொடர்ச்சியாகவே விஜய் வீட்டிலும் தீவிர சோதனை நடத்தியதாக தெரியவந்துள்ளது. அடுத்த படத்தில் 100 கோடி சம்பளத்துக்கு அட்வான்ஸ் வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் வருமானவரித்துறையினர் விஜய்க்கு சம்மன் வழங்கியதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு தற்போது தளபதி சென்னை திரும்பியுள்ளாராம்.
இந்த மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் விஜய் சேதுபதி மற்றும் விஜயின் சண்டைக்காட்சிகள் நெய்வேலி உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
