Connect with us

Cinemapettai

64-update

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி 64 படம் குறித்து சூப்பர் அப்டேட்.. இப்போது சென்னையில்.. நெக்ஸ்ட் ஷிமோகாவில்!

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 64’ என தற்காலிகமாக அழைக்கப்படும் புதிய படத்தின் அடுத்த கட்ட படிப்பிடிப்பு கர்நாடகா மாநிலம் ஷிமோகாவில் இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் நடைபெற உள்ளது.

நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் தளபதி 64 என்ற புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

இத்துடன் சாந்தனு, ஆண்ட்ரியா. ஸ்ரீமன், சஞ்சீவ், ரம்யா சூப்பிரமணியன், ஸ்ரீநாத் உள்பட பலரும் நடித்து வருகிறார்கள். விஜய்யின் உறவினர் ஷேவியர் பிரிட்டோ இந்த படத்தை தயாரித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் நீண்ட நாட்கள் நடந்தது. அதனைத்தொடர்ந்து நேற்று முதல் சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இன்னும் ஒரு வாரம் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்த நாட்களில் விஜய் சேதுபதி மற்றும் விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.

அதன்பிறகு தளபதி 64 படக்குழு இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் கர்நாடகாவின் ஷிமோகாவில் அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்குகிறது. இங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top