Tamil Cinema News | சினிமா செய்திகள்
தர லோக்கலாக இறங்கி அடிக்கும் தளபதி விஜய்.. தாறுமாறு ரேஞ்சில் தளபதி-64 கெட்டப்
தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் உலகமெங்கும் வசூல்வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் சுமார் 250 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இதனையடுத்து தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதை அமைப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
அவ்வப்போது தளபதி-64 படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படங்கள் லீக் ஆகி வருகின்றன. என்னதான் இயக்குனர், தயாரிப்பாளர் படக்குழுவை கட்டுப்படுத்தினாலும் எப்படியாவது புகைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது.
அந்த வகையில் தற்போது வெளியான தளபதி-64 புகைப்படத்தில் கையில் காப்புடன் தார தப்பட்டை முழங்க கம்பீரமாக நடந்து வரும் தளபதியின் புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கத்தி படத்திற்கு பிறகு அனிருத், விஜய்க்கு இசையமைப்பதால் இந்த படத்தின்மீது எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் எகிறிக்கிடக்கிறது என்பது உண்மையே.!

leaked-pic
