Connect with us
Cinemapettai

Cinemapettai

தளபதி 64 அப்டேட்.. சென்னை திரும்பும் விஜய்

vijay-64

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி 64 அப்டேட்.. சென்னை திரும்பும் விஜய்

தளபதி 64 என்று அழைக்கப்படும் பெயரிடப்படாத ஆக்சன் திரில்லர் படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி வில்லன் வேடத்தில் நடிக்கிறார். அத்துடன் நடிகை ஆண்ட்ரியா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இவர்களை தவிர சாந்தனு, அர்ஜுன் தாஸ், சிம்ரன், சஞ்சீவ், ஸ்ரீநாதன், ரம்யா சுப்ரமணியன், கௌரி கிருஷ்ணன், லின்டு ரோனாய், சுனில் ரெட்டி உள்பட பலர் நடித்துள்ளனர்.

தளபதி 64 படத்தை விஜய்யின் உறவினரான சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். அனிருத் இசையமைக்க சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் பட தொகுப்பு செய்கிறார். வரும் ஏப்ரல் மாதம் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி படம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு துவங்கியது.

தற்போது விஜய் நடிக்கும் பல காட்சிகள் சிமோகாவில் படமாக்கப்பட்டு வந்தது. அங்கு நடந்த படப்பிடிப்பு முடிந்ததையடுத்து இன்று விஜய் சென்னை திரும்புகிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top