Tamil Cinema News | சினிமா செய்திகள்
இன்று டபுள் சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் ஆடும் தளபதி ரசிகர்கள்.. மாஸ்டர் லேட்டஸ்ட் அப்டேட்
தளபதி விஜய்யின் அடுத்த படத்தின் 4வது கட்ட படப்பிடிப்பு விஜய் சேதுபதியுடன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
நியூ இயர் அன்று ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் பொங்கல் தினமான இன்று 5 மணி அளவில் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.
அதுமட்டுமில்லாமல் 6 மணிக்கு பிகில் திரைப்படம் முதல் முறையாக சன் தொலைக்காட்சியில் வெளியிடப்படவுள்ளது. இந்த இரட்டிப்பு சந்தோஷத்தில் தளபதி ரசிகர்கள் கொண்டாட காத்திருக்கின்றன.
தளபதியின் செகண்ட் லுக் போஸ்டர் கண்டிப்பாக ட்விட்டர் ட்ரெண்டிங் ஆகிவிடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைது என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
