Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் படத்தில் ஆண்ட்ரியா.. இப்படி ஒரு வேடமா.. ரசிகர்கள் குஷி
Published on
பிகில் படத்தை தொடர்ந்து தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார் விஜய். கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார். சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.
விஜய் உடன் முதல்முறையாக விஜய் சேதுபதி நடிக்கிறார். அதுவும் மிரட்டலான வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தை இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 22 நாட்கள் நடந்து முடிந்துவிட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர் ரஜினியின் பேட்ட படத்தில் நடித்திருந்தார்.
இந்தபடத்தில் சாந்தனு, வர்கீஸ் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஆண்ட்ரியாவும் நடிக்க உள்ளார். கவர்ச்சியான பேராசிரியை வேடத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறாராம். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார்.
