Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி 63 படத்தின் கதை லீக் ஆனது.! கேட்டாலே மிரளுது

தளபதி விஜய் சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது, படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார், மேலும் யோகி பாபு விவேக், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கும் அரசியல்வாதிகளால் promotion கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் கதையம்சம் அப்படித்தான் இருக்கிறது, தளபதி 63 கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம், இந்த படத்தில் விஜய் கோச்சராக நடிக்கிறார்.
இந்தியாவில் பல விளையாட்டு துறைகள் இருந்தாலும் கிரிக்கெட்டை விட மற்ற விளையாட்டுக்கள் பின்தங்கியே இருக்கிறது அதுவும் கால்பந்து விளையாட்டு இந்தியாவில் பல மடங்கு பின்தங்கியுள்ளது இந்த கால்பந்து விளையாட்டு ஏன் இப்படி பின்தங்கியுள்ளது என்பதை வைத்துதான் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
மேலும் கால்பந்து போட்டிக்காக வீரர்களை தேர்வு செய்து வைத்திருக்கிறார்கள் தேர்வு செய்யும் கமிட்டி ஆனால் எதிர்பாராத விதமாக அந்த வீரர்கள் ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள் அந்த கொலைகள் அனைத்தையும் கோச்சாளர் விஜய் தான் செய்கிறார் என்று அவர் மீது பழி வருகிறது.
இதனால் தன்மீது வந்த பழியை எப்படியாவது உடைத்தெறிய வேண்டும் என போராடுகிறார் விஜய், இந்த கொலைகள் எல்லாம் யார் செய்கிறார்கள் யார் காரணம்? எதற்காக கொலை செய்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பது இந்த படத்தின் கதை என தெரியவந்துள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்யின் பெயர் மைக்கேல் என தகவல் வெளியானது ஆனால் படத்திற்கும் மைக்கேல் என தலைப்பு வைக்கலாம் படக்குழு ஆலோசித்து வருகிறது அவ்வாறு பெயர் வைத்தால் கண்டிப்பாக அரசியல் தலைவர்கள் ப்ரோமோஷன் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
