Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி 63 – கால்பந்து மைதானத்தில் இருந்து லீக் ஆனா மாஸ் வீடியோ.!
Published on
தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தை வருகின்ற தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்தாக வெளியாக இருக்கிறது, மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் விஜய் பிறந்த நாள் அன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு சென்னை அதன் சுற்றுப்புறங்களில் தான் நடைபெற்று வருகிறது, மேலும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அடிக்கடி புகைப்படமும் வீடியோவும் இணையதளங்களில் லீக்காகி வைரல் ஆனது.
சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது இந்த செட்டில் கால்பந்து பயிற்சியாளர் போல் ஒருவர் கால் பந்தை வைத்துக் கொண்டு பல வித்தைகளை செய்கிறார் இந்த வீடியோவை ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் லீக் செய்துவிட்டார்கள் என தெரிகிறது.
