Connect with us
Cinemapettai

Cinemapettai

தளபதி 63 படபிடிப்பில் பயங்கர தீ விபத்து.! தீயில் கருகிய 63 அரங்குகள் இதோ வீடியோ

atlee

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி 63 படபிடிப்பில் பயங்கர தீ விபத்து.! தீயில் கருகிய 63 அரங்குகள் இதோ வீடியோ

thalapathy 63 : நடிகர் விஜய் அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார், படம் முடிவதற்குள் பல அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகின்றன சமீபத்தில்கூட எலக்ட்ரீசியன் செல்வராஜ் தலையில் மின் விளக்கு விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை விஜய் நேரில் சென்று பார்த்தார் இது அனைவருக்கும் தெரிந்தது தான், இந்த நிலையில் மீனம்பாக்கம் பின்னி மில் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இங்குதான் தளபதி 63 திரைப்படத்திற்காக மிகப்பெரிய அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்த இருந்தார்கள் ஆனால் அனைத்து அரங்குகளும் எரிந்து நாசமாகி விட்டன, பின்னி மில் ஆலையில் பல ஆக்ஷன் திரைப்படங்கள், பேய் திரைப்படங்கள் என அனைத்திற்கும் இங்குதான் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்துவார்களாம்.

அப்படித்தான் தளபதி 63 படத்திற்கும்  50 லட்சம் மதிப்பில் வீடுகள், வங்கிகள், தேவாலயம் என  63 அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது, இன்று மாலை ஏற்பட்ட தீ விபத்தால் காய்ந்த சருகுகள் மற்றும் மரம் செடி கொடிகளால் தீ பரவியது இதை அறிந்த தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் வாகனங்கள் விரைந்து ஒன்றரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.

இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளார்கள் ஆனாலும் இதை பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். படப்பிடிப்பு தரப்பிலிருந்து அங்கு இன்று படப்பிடிப்பு நடைபெறவில்லை என கூறியுள்ளார்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top