’தளபதி 63′ உரிமையைக் கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி.

தளபதி 63 விஜய் அட்லீ கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் . இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். நயன்தாரா, யோகி பாபு. கதிர், விவேக், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, சௌந்தரராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் முழு வீச்சில் செல்கிறதாம்.

டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் என எதுவும் வெளியாகவில்லை, அதற்குள்ளாகவே இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் பிக்ச்சர்ஸ் வாங்கியுள்ளது. விஜய்யின் சர்கார் படத்தை தயாரித்தும் இந்நிறுவனம் தான்.

இந்த விஷயம் விட்டெரில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது. மேலும் சாட்டிலைட் உரிமையை சன் டிவி 50 – 52 கோடி கொடுத்து வாங்கியதாக சொல்கிறார்கள்.

எனினும் எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

மேலும் அமேசான் பிரயம் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை தட்டி செல்ல வாய்ப்புள்ளது எனவும், அதன் தொகை இதை விட அதிகம் எனவும் கிசுகிசுக்கிறார்கள்.

இது மட்டும் உண்மையாகும் பட்சத்தில் தென்னிந்திய சினிமா லெவலில் இது மிகப்பெரிய ரெக்கார்ட் தான்.

Leave a Comment