Tamil Cinema News | சினிமா செய்திகள்
கத்தி பட ஸ்டைலில் தளபதி 63 படத்தின் போஸ்டர்.. தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
தளபதி 63 படத்தில் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
கத்தி பட ஸ்டைலில் தளபதி 63 படத்தின் போஸ்டர்
தளபதி 63 படத்தில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தை பற்றிய அனைத்து செய்திகளையும் மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர்.
தளபதி 63 படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். காமெடியாக யோகி பாபு நடித்து கொண்டிருக்கிறார். பிரசாத் லேபில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
கத்தி படத்தின் போஸ்டர் டிசைன் மிகவும் பேசப்பட்டது. டிசைனர் கோபி கிருஷ்ணா கத்தி படத்தின் டிசைனிங் மிக நன்றாகச் செய்திருப்பார். கத்தி படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தனது தளபதி 63 படத்தில் திரும்பவும் கோபி கிருஷ்ணாவின் வைக்கலாம் என கூறியுள்ளனர்.
மிக விரைவில் தளபதி படத்தின் போஸ்டர் வெளிவர இருக்கிறது என தயாரிப்பு நிறுவனமான கல்பாத்தி அகோரம் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
This is one of my all time favourite #Vijay Sir posters designed by the super talented @gopiprasannaa that I have in my office. Hopefully will have another poster with our banner very very soon ??? #Thalapathy63 #Ags ? pic.twitter.com/SNmKvrauPf
— Archana Kalpathi (@archanakalpathi) March 2, 2019
