தளபதி 63 பாடல் வெளியீட்டு உரிமையை தட்டிச் சென்ற பிரபல நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக தளபதி 63 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெண்கள் கால்பந்து மையமாக வைத்து உருவாகும்  இந்த படத்தில் விஜய் கால்பந்து கோச்சராக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

மேலும் படத்தின் அப்டேட்  எப்போது வரும் என தயாரிப்பாளரை  நச்சரித்து வந்தார்கள் ரசிகர்கள் இதனாலேயே பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு படத்தின் பாடல்களை நான் தான் முதலில் பார்க்கப் போகிறேன் என ஏ ஆர் ரகுமான் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தளபதி 63 படத்திலிருந்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது,  தளபதி 63 படத்தின் பாடல் வெளியீட்டு உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கடும் போட்டிகளுக்கிடையே வாங்கியுள்ளது.

thalapathy 63 music rights
thalapathy 63 music rights

Leave a Comment