Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் தளபதியுடன் கை கோர்க்கும் இளம் நாயகன்…

தளபதி நடிப்பில் உருவாக இருக்கும் 63வது படம் குறித்த சுவாரசிய தகவல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

விஜய் என்றாலே கோலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் நாயகன் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒவ்வொரு படத்திலும் அவரின் நடிப்பை காண பல லட்சம் ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். விஜய் தற்போது அவரின் ஆஸ்தான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ராதா ரவி, வரலட்சுமி சரத்குமார், லிவிங்ஸ்டன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். படம் சமீபத்திய சமூக பரபரப்பை எடுத்து கொள்ளும் கதையை பின்னணியாக கொண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல், ஆளுமை என பல இடத்தின் உண்மை முகத்தை முருகதாஸ் இப்படத்தில் கூறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்நிலையில், விஜய் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் தகவல்கள் இணையத்தில் கசிய தொடங்கி இருக்கின்றன.

விஜயின் அடுத்த படத்தை பெற பல முன்னணி இயக்குனர்கள் போட்டா போட்டியில் இருக்கிறார்கள். வெற்றி மாறன், அமீர், மோகன் ராஜா, ஏ.எல்.விஜய் என பட்டியலில் நீண்டுக்கொண்டே செல்கிறது. இதில் கண்டிப்பாக அடுத்த படத்தை அட்லீ இயக்க வாய்ப்பில்லை என்ற தகவல் மட்டும் கோலிவுட் தரப்பில் வலுவாக முன் வைக்கப்பட்டு இருக்கிறது.

இயக்குனர் யாராக இருக்கும் என எதிர்பார்ப்புகள் நிலவி வரும் நிலையில், தயாரிப்பு நிறுவனம் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. கடம்பன், மொட்ட சிவா கெட்ட சிவா படங்களுக்கு பிறகு படங்கள் எதுவும் தயாரிக்காமல் இருக்கும் இந்நிறுவனம், விரைவில் தங்களுடைய 100-வது படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் விஜய் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. தற்போது அத்தகவலை உறுதிப்படுத்தி இருக்கும் ஜீவா, அப்படத்தில் தானும் நடிக்கலாம் என தெரிவித்து இருக்கிறார். முன்னதாக, பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் விஜயுடன், ஜீவா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100வது படம் விஜயின் மெர்சல் என்பதால், இப்படமும் நல்ல வரவேற்பை பெறும் என இப்போதே ஆரூடத்தை தொடங்கி விட்டது கோலிவுட் தரப்பு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top