Tamil Cinema News | சினிமா செய்திகள்
10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தளபதி 63 படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்.!
விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியாகிய திரைப்படம் சர்கார் இந்த திரைப்படம் இன்னும் பல திரையரங்கத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது இந்த நிலையில் தளபதி விஜய் அடுத்த படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார்.

vivek
தளபதி 63 படத்தை அட்லி தான் இயக்க இருக்கிறார் இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வந்தது இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்க இருக்கிறார் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது.
இந்த நிலையில் படத்தின் ஹீரோயின் யார் என்பதை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை மேலும் படத்தில் பிரபல காமெடி நடிகர் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆம் பிரபல கல்லூரி விழாவில் கலந்துகொண்ட விவேக் தளபதி 63 படத்தில் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார். இவர்கள் கூட்டணி கடந்த 2008 ல் வெளியாகிய குருவி படத்திற்கு பிறகு தளபதி 63 படத்தில் இணைய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
