தளபதி விஜய் மெர்சல் படத்தை தொடந்து இப்பொழுது தளபதி 62 படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் முருகதாஸ் இயக்குகிறார்.மேலும் படத்தை சன் பிக்சர்ஸ் மிக பிரமாண்ட பொருட் செலவில் தயாரிக்கிறார்கள்.

Mersal-Vijay

சமீபத்தில் இந்த படத்தின் படபிடிப்பு பூஜையுடன் தொடங்கி சென்னை அதன் சுற்று வட்டாரா பகுதிகளில் நடைபெற்று வந்தன மேலும் அடுத்த கட்ட படபிடிப்பு கொல்கத்தா செல்லவுள்ளது படக்குழு.

vijay

தளபதி 62 படம் தொடங்கியதும் தளபதி 63 படத்தின் அறிவிப்புகள் வந்துகொண்டே இருக்கிறது தளபதி 63 படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது மேலும் இந்த நிறுவனத்திற்கு இது 100 படமாக அமைகிறது தளபதி 63 படத்தின் சிறப்பு இதுதான். தற்பொழுது தளபதி63 படத்தின் இயக்குனர் விவரம் தெரியவந்துள்ளது.

vijay 62

அவர் ஏற்கனவே விஜய்யை வைத்து தெறி, மெர்சல் என இரண்டு ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் ஆம் நம்ம அட்லி தான், அட்லீயுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகிறார்கள்.

Director Atlee

இரண்டு வெற்றிப்படங்களுக்கு பிறகு மீண்டும் அமையவுள்ள விஜய் – அட்லி கூட்டணியால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மெர்சல் போல இரண்டு மடங்கு ஹிட் கொடுப்பார் என தெரிகிறது என்ன நடக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.