Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay63

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி 63 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா.! விஜய் தரப்பில் இருந்து வந்த மாஸ் தகவல்.!

விஜய் தற்பொழுது முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார், படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது ஆனால் தற்பொழுது சினிமாவில் நடக்கும் ஸ்ட்ரைக் காரணமாக நிருத்தபட்டுள்ளது, படபிடிப்பு கிட்டத்தட்ட  40 சதவீதம் முடிந்துள்ளதாக கூறுகிறார்கள்.

படத்தை பிரமாண்ட பொருட் செலவில் சன் பிக்சர் நிறுவனம் தயாரிகிறது இந்த படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது மேலும் தளபதி விஜய் அடுத்ததாக யாருடன் இணையபோகிறார் என்பது பல ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.

தற்பொழுது விஜய்யின் அடுத்த படத்தை இயக்க போவது யார் என்ற தகவல் கிடைத்துள்ளது அதுவும் விஜய் தரப்பில் இருந்து, இந்த இயக்குனர் நடிகர் விஜய்யை வைத்து ஏற்க்கனவே ஒரு படத்தை இயக்கியுள்ளார், ஆம் விஜய்யை வைத்து வேலாயுதம் படத்தை இயக்கிய மோகன்ராஜாவுடன் தான் விஜய்63 படத்தில் இணைய போகிறாராம்.

இவர் தனி ஒருவன் படத்தை போல் ஒரு வித்தயாசமான கதைகளத்தை கொண்டு உருவாக இருக்கும் தளபதி 63 படத்திற்கு இயக்குனர் மோகன் ராஜா கதையை தயார் செய்து வருகிறாராம்.முழு ஸ்கிரிப்ட் விஜய்யிடம் காட்டி ஓகே சொன்ன பிறகு இதை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறுகிறார்கள். தளபதி 62 படம் முடிவதற்குள் தளபதி 63 படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top