Connect with us
Cinemapettai

Cinemapettai

தளபதி 63 – எகிறிய பட்ஜெட்.! அதட்டிய விஜய்.! அடிபணிந்த அட்லி.!

thalapathy 63

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி 63 – எகிறிய பட்ஜெட்.! அதட்டிய விஜய்.! அடிபணிந்த அட்லி.!

தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் 3வது முறையாக தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகும் இந்த திரைப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

அது மட்டும் இல்லாமல் கதிர்,விவேக்,யோகி பாபு, ஜாக்கி ஷெராப் என பலர் நடித்து வருகிறார்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அதன் சுற்றுப்புறங்களில் தான் நடைபெற்று வந்தது.

அதுவும் சென்னையில் ஈவிபி திரைப்பட நகரில் மிகப்பெரிய ஸ்டேடியம் உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது இன்னும் 50 நாள் படப்பிடிப்பு அங்குதான் நடைபெறும் என தகவல் வெளியாகின.

இந்த நிலையில் படத்தின் பட்ஜெட் சொன்னதைவிட பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும் அதனால் அட்லீக்கும் தயாரிப்பு தரப்பில் இருந்தும் வாக்குவாதம் நடைபெற்று உள்ளது.

அதனால் விஜய் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு அட்லியிடம் கேட்டுள்ளார், அதற்கு அட்லி கணக்கு எல்லாம் சரியாகத்தான் அண்ணா இருக்கு வேண்டுமென்றால் ஆடிட்டரை வைத்து பார்க்க சொல்லுங்கள் எனக் பணிந்துள்ளார். விஜய்யும் அட்லி சொல்வதை நம்பியதாக கூறப்படுகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top