தளபதி 63 படத்திற்காக 4 டைட்டில் இதுதானோ.? என்ன ஒரு வெறித்தனம்

நடிகர் விஜய் அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடித்து வரும் திரைப்படம் தளபதி 63 இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார், கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த கதையில் கதிர், யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷராஃப், என பலர் நடித்து வருகிறார்கள்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் விஜய் கால்பந்து கோச்சராக நடித்து வருகிறார், படப்பிடிப்பு சென்னையில் அதன் சுற்றுப்புறங்களில் தான் நடந்து வருகிறது, இந்த நிலையில் படத்திற்கு என்ன டைட்டில் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் அட்லீ படத்திற்கு 4 டைட்டிலை தேர்வு செய்து வைத்துள்ளாராம் அதில் ஒன்று விஜய் தேர்வு செய்ய வேண்டுமாம் அவை ” வெறி, வெறித்தனம், மைக்கேல், கேப்டன் மைக்கேல்” ஆகியவை ஆகும் இந்த படத்தில் விஜய்யின் கேரக்டர் மைக்கேல் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment