இதெல்லாம் ஒரு அப்டேட்டா? தளபதி 63 தயாரிப்பாளரை காய்ச்சி எடுக்கும் ரசிகர்கள்

தளபதி 63 படத்தின் அப்டேட் இன்று 6 மணிக்கு வெளிவரப் போகிறது என்ற செய்தியை தளபதி 63 படத்தின் தயாரிப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.வெளிவந்த நேரத்தில் இருந்து 6 மணி வரை காத்திருந்த ரசிகர்களுக்கு கிடைத்தது பெரிய ஏமாற்றம்.

தமிழ் சினிமாவில் அப்டேட் என்ற பெயரில் தயாரிப்பாளர்கள் விளம்பரத்திற்காக ரசிகர்களை பயன்படுத்திக் கொள்ளும் விதம் மிகவும் அருவருப்பை ஏற்படுத்துகிறது.

தளபதி 63 படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இன்று 6 மணிக்கு ஒரு பெரிய அப்டேட் உள்ளது என்று கூறினார். அதை நம்பி ரசிகர்கள் பலரும் 6 மணி வரை காத்திருந்தனர்.

அதாவது பர்ஸ்ட் லுக் போஸ்டரை 21-ம் தேதியும், செகண்ட் லுக் போஸ்டர் 22ம் தேதியும் வெளியிடுவதாக அறிவித்திருக்கிறார்கள். இது ஒரு அப்டேட்டா என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்த அப்டேட்டை அர்ச்சனா கல்பாத்தி காலையிலேயே சொல்லியிருக்கலாம். எதற்காக சாயந்திரம் ஆறு மணி வரை காத்திருக்க வைத்தார்கள் என்று தெரியவில்லை.

எல்லாம் வியாபாரம்தான் அப்பொழுதுதான் ரசிகர்கள் காத்திருப்பார்கள். அனைத்து ரசிகர்களும் ஒன்று சேருவார்கள். அப்பொழுதுதான் டிரெண்ட் ஆகும் என்று ஒரு கணக்கு போட்டு வைத்திருக்கிறார் தளபதி 63 தயாரிப்பாளர்.

தயவு செய்து தளபதி விஜய் அவர்கள் தயாரிப்பாளரிடம் இதுமாதிரி அப்டேட் எல்லாம் வெளியிட்டு ரசிகர்களை  ஏமாற்றாமல் இருக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Comment