Connect with us
Cinemapettai

Cinemapettai

thalapathy 63

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி 63 தர லோக்கலில் உருவாகும் இன்ட்ரோ பாடல் அப்டேட் இதோ.!

தளபதி விஜய் சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் தளபதி-63 திரைப்படத்தில் நடிக்க ரெடி ஆகி விட்டார் இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

காமெடி கதாபாத்திரத்தில் யோகிபாபு மற்றும் விவேக் நடித்துவரும் திரைப்படத்தில் வில்லனாக டேனியல் பாலாஜி ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள் விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் கதிர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் விஜய்யின் பெயர் மைக்கேல் என தகவல் வைரலாகி வருகிறது படத்தின் சில காட்சிகள் அமெரிக்காவில் எடுக்கப்படும் என நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது இந்த நிலையில் கடந்த மாதம் 21ம் தேதி சென்னை பின்னிமில்லில் பூஜை தொடங்கி படப்பிடிப்பு நடைபெற்று வந்தது, மேலும் தற்பொழுது சென்னையில் பின்னிமில்லில் செட் அமைக்கப்பட்டு தளபதி 63 படத்திற்கான intro song காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் பாடல்கள் அனைத்தையும் ஆர் ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார் என்பது அனைவருக்கும்  தெரிந்ததே இந்த நிலையில் படத்தின் முதல் சாங் விஜய்யின் இன்ட்ரோ பாடல் லோக்கல் மற்றும் அர்பன் சாயல் வடிவில் இருக்கும் என கூறுகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top