இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த படம் தாரை தப்பட்டை இந்த திரைப்படம் எதிர் பார்த்த வெற்றியை அடையவில்லை என்றாலும் இதில் நடித்தவர்களின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது அதில் குறிப்பாக வரலட்சுமி மிகவும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார் அதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது.

இவர் பிறகு விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா படத்தில் அவரின் நடிப்பு திறமையை மீண்டும் காத்திருப்பார் வரலட்சுமி தற்பொழுது விஷாலின் சண்டக்கோழி-2, தனுஷின் மாரி-2,விமலின் கன்னிராசி, கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் Mr. சந்திரமௌலி படத்திலும் மற்றும் தனது தந்தை நடிக்கும் பாம்பன் உள்ளிட்ட பல படத்தில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.

Varalaxmi

இப்படி பிஸியாக இருக்கும் வரலட்சுமி தற்பொழுது விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி-62 படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி கசிந்துள்ளது, இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் தான் கதாநாயகியாக நடித்துவரும் இந்த நிலையில் இவர் இணைந்திருப்பது அனைவரிடமும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

Varalaxmi

வரலட்சுமி கதாபாத்திரம் மிகவும் சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்கிறது படக்குழு, வெகு விரைவில் இவரின் கேரக்டர் குறித்த தகவல் வெளிவரும் என எதிர்பார்க்க படுகிறது.