thalapathy 62

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்தின் டைட்டில் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் விஜய்62. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார்.

படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் ஷூட்டிங் கொல்கத்தா, சென்னை ஆகிய முக்கிய இடங்களில் நடைபெற்று வருகிறது. மல்ட்டி மில்லியனராக இப்படத்தில் விஜய் நடிக்கிறார். அதிலும், இப்படத்தில் விஜய் எப்போதும் இல்லாமல் ஸ்டைலிஷாக நடித்து வருவதால் ரசிகர்கள் செம ஆவலாக வெயிட் செய்து வருகின்றனர். படத்தை தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இதுவரை பெயரிடப்படாத இப்படத்தின் பெயர் அடங்கிய பர்ஸ்ட் லுக் விஜயின் பிறந்தநாளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் படித்தவை:  மகனுக்கு சபாஷ் போட்ட ஆஸ்கார் நாயகன்... என்ன செய்தார் அப்படி?

இதற்கு முன்னரே, விஜய் தனது ஆஸ்தான இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸுடன் இரண்டு படங்களில் கூட்டணி அமைத்து இருக்கிறார். ஸ்லீப்பர் செல்லை கதை பின்னணியாக கொண்ட துப்பாக்கி படம், விவசாயிகளின் பிரச்சனையை சொல்லும் கத்தி ஆகிய இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனால், மூன்றாவது படமான இப்படமும் பெரும் எதிர்பார்ப்பை உருவாகி இருக்கிறது. முதல் இரண்டு படங்களில் போல், இப்படத்திலும் கண்டிப்பாக சமூக பிரச்சனையை தான் கையில் எடுத்திருப்பர் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. பணக்காரரான விஜய் விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் நல்லது செய்ய நினைக்கிறார். இதில் வரும் தடங்கலை அவர் எப்படி சமாளிக்கிறார் என்ற ரீதியில் படம் நகர இருப்பதாக பேச்சுகள் அடிப்படுகிறது.

அதிகம் படித்தவை:  திரை இசையில் திருப்பம் உண்டாக்கிய இளையராஜா

இந்நிலையில், இப்படத்திற்கு கோடாரி என்ற பெயரை படக்குழு தீர்மானித்து இருப்பதாக ஒரு தகவல்கள் இணையத்தில் லீக்காகி இருக்கிறது. இதுதான் தலைப்பா என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. ஆனால், கண்டிப்பாக எதும் ஆயுத பொருளின் பெயரை தான் படத்தின் தலைப்பாக படக்குழு வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. என்ன தலைப்போ கண்டிப்பாக விஜயின் பிறந்தநாளான ஜூன் 22-ந்தேதி தெரிந்து விடும்.