News | செய்திகள்
தளபதி-62 படத்தில் நடிப்பதை பற்றி நடிகை சாயிஷா அவரே கூறிய தகவல்.!
தளபதி விஜய் மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து முருகதாஸ் படத்தில் இணைந்து நடித்து வருகிறார் படத்தின் டைட்டில் இன்னும் வைக்கவில்லை இந்தப்படத்தின் அப்டேட் அடிக்கடி வந்து ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் வைத்துள்ளது.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் படபிடிப்பு பாடல் காட்சியுடன் தொடங்கியது அதுவும் சென்னை கடற்கரையில், இந்த படத்தில் கீர்த்தி சுரேசுடன் இன்னொரு நடிகை நடிக்க இருக்கிறார் என செய்திகள் பரவி வருகிறது அவர் வணமகன் படத்தில் நடித்த நடிகை சாயிஷா என்றார்கள்

Sayyeshaa
ஆனால் இந்த தகவலை முற்றிலுமாக மறுத்துள்ளார் நடிகை சயீஷா.மேலும் அவர் கூறியதாவது நான் விஜய் அவர்களின் தீவிர ரசிகை, இதை நான் நிறைய முறை சொல்லிவிட்டேன். அவருடன் படத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கு பெரிய ஆசை, ஆனால் விஜய் 62வது படத்தில் நாயகியாக நடிக்க என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை, நான் அப்படத்தில் நடிக்கவில்லை என கூறியுள்ளார்.

vijay62
இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார் ஏற்கனவே படத்தின் முதல் பாடலுக்கு இசை அமைத்துவிட்டார் என கூறுகிறார்கள் படத்தின் அடுத்த கட்ட படபிடிப்பு கொல்கத்தாவில் 30 நாள் நடக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
படத்தின் முக்கிய காட்ச்சிகள் அனைத்தும் கொல்கத்தாவில் படமாக்க படுகிறது என கூறுகிறார்கள்.மேலும் படத்தை சன் பிக்சர் பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறது.
