வெளிநாடுகளில் மட்டும் மெர்சல் படம் 12 நாட்களில் 11.1 மில்லியன் டாலர் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பி வருகிறது. அதாவது வெளிநாடுகளில் மட்டும் 72 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது.

கடந்த ஆண்டு இறுதியில் ஆமிர்கானின் நடிப்பில் வெளியான ‘டங்கல்’, ஷாருக்கான் நடித்த ‘ராயிஸ்’, ராஜமௌலியின் பிரமாண்டத்தில் உருவான ‘பாகுபலி 2’ ஆகிய படங்கள் மட்டுமே 10 மில்லியன் டாலர் வசூலைக் கடந்துள்ளன. இந்தப் பட்டியலில் மெர்சலும் இணைந்துள்ளது.

vijay

10 மில்லியன் டாலர் வெளிநாட்டு வசூல் இதுவரை எந்த தமிழ்ப் படமும் செய்யாத சாதனை. இந்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை வெளிநாடுகளில் விஜய்யின் ரசிகர்கள் ஆதரவைக் காட்டுகிறது.

தமிழ்த் திரையுலகத்தில் இதற்கு முன் வேறு எந்தப் படமும் இப்படி ஒரு சாதனையைப் புரிந்ததில்லை என்று சொல்லுமளவிற்கு ‘மெர்சல்’ படம் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. தமிழ்த் திரையுலகத்தில் அதிக வசூலைப் பிடித்த படம் என ‘எந்திரன்’ படம் முதலிடத்தில் இருக்கிறது.

mersal

சுமார் 280 கோடி வரை ‘எந்திரன்’ படம் வசூலித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அது படம் ஓடிய 100 நாட்களுக்கும் மேலான மொத்த வசூல். ஆனால், ‘மெர்சல்’ படம் 12 நாட்களிலேயே 200 கோடி ரூபாய் வசூலைக் கடந்து புதிய சாதனையைப் படைத்து திரையுலகத்தினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் கடந்த ஞாயிறுடன் 100 கோடி ரூபாய் வசூலித்த ‘மெர்சல்’ உலகம் முழுவதுமான வசூலில் 200 கோடியைக் கடந்துள்ளது.

Sonakshi-Sinha

விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி படங்களை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். மகேஷ்பாபு நடிப்பில் ஸ்பைடர் படத்தை இயக்கிய அவர் மீண்டும் விஜய் நடிக்கும் படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

இந்த படமும் முந்தைய படங்களைப்போன்று சமூக நோக்கமுள்ள ஒரு கதையில் தயாராகயிருப்பதாக சொல்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்குகிறது.

sonakshi-sinha

விஜய்யின் இந்த புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்பைடர் நாயகி ரகுல்பிரீத்சிங் நடிக்கயிருப்பது ஏற்கனவே முடிவாகி விட்ட நிலையில், தற்போது இன்னொரு நாயகியாக ஹிந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.

இவர், ரஜினி நடித்த லிங்கா படத்தில் நாயகியாக நடித்தவர், என்பதோடு ஏ.ஆர்.முருகதாஸ் ஹிந்தியில் இயக்கிய அகிரா படத்திலும் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.