Tamil Cinema News | சினிமா செய்திகள்
கத்தியில் விவசாயி.! தளபதி 62 வில் மிகப்பெரிய பிரச்சனையை கையில் எடுக்கும் விஜய்.!
தளபதி விஜய் மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படமான தளபதி62 படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் இந்த படத்தின் பூஜை போட்டு படபிடிப்பையும் ஆரபித்துவிட்டார்கள்.
தளபதி 62 வில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார், கத்தி, துப்பாக்கி தொடர்ந்து விஜயின்-62 வது படத்தையும் ஏ.அர்.முருகதாஸ் இயங்குகிறார்.
யோகி பாபு நடிக்கிறார் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறது. மெர்சலை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.ஒளிப்பதிவாளராகப் கிரீஷ் கங்காதரன், ஆர்ட் டைரக்டராக சந்தானம், எடிட் செய்கிறார் ஸ்ரீகர் பிரசாத்.
தளபதி 62 படம் வருகிற தீவாளிக்கு திரையிட முடிவு செய்துள்ளார்கள் படக்குழு அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தோடு அஜித் படமும் சூர்யா படமும் வெளிவரும் என அறிவித்துள்ளார்கள்.
நடிகர் விஜய் தற்பொழுது நடிக்கும் படங்கள் அனைத்தும் சமூக கருத்துள்ளபடங்களாகவே நடித்து வருகிறார் முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் விவசாய பிரச்சனையை கையில் எடுத்தார் அதேபோல் தளபதி62 படத்தில் மீனவ பிரச்சனையை கையில் எடுக்கவுள்ளார் என தெரிகிறது.

thalapathy 62 movie
இந்த படத்தின் முதல் காட்சியே கடற்கரையில் எடுத்துள்ளார்கள் அதனால் மீனவ பிரச்சனையை தான் விஜய் 62 படத்தின் கதையாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறத.
கடந்த பல வருடங்களாக மீனவ பிரச்சனை நடந்து வருகிறது என அனைவருக்கும் தெரியும் ஆனால் எந்த தீர்வும் இதுவரை கிடைக்கவில்லை அவர்களுக்கு.தளபதி 62 அந்த கதைதான் என்றால் மெர்சலை விட பெரிய பிரச்சனையை சந்திக்கும் என தெரிகிறது.
தளபதி62 படம் வெளிவரும் வரை காத்திருப்போம்.
