Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி 62 படத்தில் மிக மிக முக்கியமான காட்சி இதுதானாம்

தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் மெர்சல் என்ற வெற்றி படத்தை தொடர்ந்து தற்பொழுது முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் மேலும் படத்திற்கு ரகுமான் இசையமைக்கிறார்.
படத்தை பிரமாண்ட பொருட் செலவில் சன் பிக்சர் தயாரித்து வருகிறது மேலும் தளபதி 62 படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருக்கிறது அதனால் படத்தை மிகவும் விறுவிறுப்பாக இதுவரை 60% வரை படபிடிப்பை முடித்துள்ளார்கள்.
படத்தில் அரசியல் பிரமுகராக நடிக்கும் ராதாரவி மற்றும் பா. கருப்பையாவை விஜய் சந்திப்பது போல் ஒரு காட்சி பிரமாண்ட செட்டில் எடுக்கப்பட்டுள்ளது, இந்த காட்சியில் விஜய்யுடன் ஆயிரம் கணக்கான மக்கள் இருக்கிறார்களாம் படத்தில் மிக முக்கியமான காட்சி இதுதான் என விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
