பைரவா படத்திற்கு பிறகு விஜய் நடித்த படம் மெர்சல் இந்த படத்தை இயக்குனர் அட்லி இயக்கினார் மெர்சல் படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்ப்பை பெற்றது.

vijay 62

இதனை அடுத்து விஜய் முருகதாஸ் படத்தில் நடிக்கிறார் இந்த படத்திற்கு டைட்டில் இன்னும் அறிவிக்கவில்லை அதனால் தளபதி62 என அழைக்கிறார்கள் இந்த படத்திற்கு முன்பு இயக்குனர் முருகதாஸ் விஜயை வைத்து துப்பாக்கி மற்றும்  கத்தி படத்தை எடுத்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

vijay

அதனால், இந்த படத்தின் செய்தி வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறவைத்து வருகிறது.தளபதி62 படத்தை சன் பிச்சர் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது, விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

Thalapathy Vijay

படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார் கிரீஸ் கங்காதரன் ஒளிபதிவு செய்கிறார் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார், ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். படத்தின் பூஜை 19 ம் தேதி தொடங்கியது அன்றே படபிடிப்பு ஆரம்பித்த்தார்கள். படபிடிப்பு பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கிறது.

vijay

தளபதி படத்திற்கு ஸ்டன்ட் இயக்குனராக அனல் அரசு கமிட் செய்துள்ளார்கள் படக்குழு என தகவல் கசிந்துள்ளது இவர் ஏற்கனவே விஜய்யின் கத்தி,பைரவா, மெர்சல் என விஜய்யின் சில படங்களுக்கு அனல் அரசு தான் ஸ்டன்ட் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது,தளபதி62 படம் வருகிற தீபாவளிக்கு வெளியிடுவதாக அறிவித்துள்ளார்கள் படக்குழு.எனவே தீபாவளிக்கு சரவெடிதான் என கூறுகிறார்கள் விஜய் ரசிகர்கள்.