Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் மனைவி சங்கீதாவுக்கு கிடைத்த உயரிய விருது.. உற்சாகத்தில் தளபதி ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் இளைய தளபதியாக அறிமுகமாகி தற்போது தளபதியாக உயர்ந்து நிற்பவர் விஜய். இவர் 1999 ஆம் ஆண்டு தன்னுடைய ரசிகையான சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.
தளபதி விஜய் திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களுக்கு அவ்வப்போது வருகைதரும் சங்கீதா, மற்ற விருது நிகழ்ச்சிகளில் பெரிதும் கலந்து கொள்ள மாட்டார். மேலும் அவ்வளவாக வெளியே செல்வதை அவர் விரும்ப மாட்டார் எனவும் அவர்களின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் கலாட்டா மற்றும் கலர்ஸ் தமிழ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய வொண்டர் வுமன் எனும் விருது நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார். வொண்டர் வுமன் விருது நிகழ்ச்சியில் சங்கீதாவுக்கு முடிசூடா தளபதி எனும் விருது வழங்கப்பட்டது.
இதனை பிரபல நடிகை சிம்ரன் சங்கீதாவுக்கு வழங்கினார். மேலும் விருது வந்த அனைவருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் நன்றி எனக்கூறி சங்கீதா விடைபெற்றார். தளபதி ரசிகர்கள் தளபதியை மட்டும் கொண்டாட மாட்டார்கள். தளபதியை சார்ந்த அனைவரையும் கொண்டாடுவார்கள் என்பதே உண்மை.
