Tamil Cinema News | சினிமா செய்திகள்
தொகுப்பாளினியின் திருமணத்தில் திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த தளபதி.. அரங்கமே அதிர்ச்சியில் திக்குமுக்காடியது
தமிழ் சினிமாவில் இளம்பெண்களின் கனவுக் கண்ணனாக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடைய ஸ்டைல், ஆக்சன், டான்ஸ் போன்ற பலவற்றிற்கு இளசுகள் கிரங்கி கிடைக்கின்றனர்.
அப்படிப்பட்ட தளபதி விஜய், திடீரென்று சாதாரண தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருக்கும் அஞ்சனாவின் திருமணத்தில் திடீர் சர்ப்ரைஸ் கொடுத்து திருமண அரங்கையே இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
தனது திருமண நிகழ்ச்சியை பற்றி சுவாரஸ்யமான நிகழ்வுகளை நேர்காணல் மூலம் பகிர்ந்துகொண்ட அஞ்சனா “தளபதி விஜய் திடீரென்று எனது திருமணத்திற்கு வந்தது என்னால் மறக்கமுடியாத நிகழ்வாகும்.
மேலும் அவர் பிரம்மாண்டமான ஆடம்பர காரில் வருவார் என்று நினைத்தபோது சிறிய காரில் எளிமையாக திருமண நிகழ்ச்சிக்கு வந்து இறங்கியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது” என்று கூறி பல சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார் அஞ்சனா.
மேலும் தொகுப்பாளினி அஞ்சனா ‘கயல்’ படத்தில் நடித்த சந்திரனை திருமணம் செய்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

vijay-anjana-1
அஞ்சனா தளபதி விஜயை பற்றி கூறிய இந்த சுவாரசியமான தகவலை அறிந்துகொள்ள அவருடைய ரசிகர்கள் இணையத்தை மொய்க்கிக்கின்றனர்.
