5 மொழிகளில் வெளியாகும் தலைவி.. வரிசை கட்டி நிற்கும் அமேசான், நெட்ஃபிக்ஸ்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான தலைவி படத்தை இயக்குனர் விஜய் இயக்கி முடித்துள்ளார். இந்தப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார்.

மேலும் அரவிந்த்சாமி, சமுத்திரக்கனி, அபிராமி உள்ளிட்டோர் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எனவே தலைவி படம் பெரும் விலைக்கு ஓடிடி தளத்தில் வெளியிட வாய்ப்பு இருந்தாலும் இந்தப் படத்தை திரையரங்கில் தான் திரையிடப்படும் என்று படக்குழு திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளது.

ஏனென்றால் கொரோனா தாக்கம் சிறிது சிறிதாக குறைந்து வரும் நிலையில், ஒரு சில மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் விரைவில் திரையரங்குகள் அனைத்தும் முழுமையாக திறந்தவுடன் தலைவி திரைப்படம் திரையிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது தமிழகத்திலும் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளது. ஆகையால் கூடிய விரைவில் தலைவி திரைப்படம் திரையரங்கில் திரையிடப்பட்டு, அதன்பின்பு ஓடிடி தளத்தில் ஹிந்தியில் நெட்ஃபிக்ஸ் மூலமும்,

thalaivi
thalaivi

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகியவை அமேசான் மூலமாக திரையிடப்படும். ஏற்கனவே கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த குயின் என்ற வெப் சீரியல் ஆனது ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறை சித்தரித்து வெளியாகி,

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதே போன்று தலைவி திரைப்படமும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படமாகவே விளங்குகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்