புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

எனக்கும் சமமான ரோல் வேண்டும்.. தலைவர் 169இல் சிவராஜ்குமார் போட்ட போடு

அண்ணாத்த படத்திற்குப் பிறகு நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 169 படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யாராய் இடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் பிரியங்கா அருள்மோகன், ரம்யா கிருஷ்ணன், வடிவேலு மற்றும் பலர் நடிக்கயுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார் என்ற செய்தி வெளியானது. தமிழ் சினிமாவில் ரஜினி எப்படி மலையோ அதுபோல் கன்னடத்தில் சிவராஜ்குமார் மலை. இதனால் இவர்கள் இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் சமீபத்தில் சிவராஜ்குமார் கொடுத்த பேட்டி ஒன்றில் நீங்கள் ரஜினி படத்தில் நடிக்கிறீர்களா என்ற கேள்விக்கு, அது ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸாக ரசிகர்களுக்கு இருக்கும் என சாதுரியமான பதிலை சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

இதனால் தலைவர் 169 படத்தில் சிவராஜ் நடிக்கிறார் என்பது உறுதியாக தெரிந்துள்ளது. ஆனால் படத்தில் ரஜினியின் நண்பராக நடிக்கிறாரா அல்லது தம்பியாக நடிக்கிறாரா என்று பல கேள்விகள் எழுந்தது. ஆனால் தற்போது இவர் நடிக்கப் போகும் கதாபாத்திரம் வெளியாகியள்ளது.

அதாவது இப்படத்தில் ரஜினிக்கு இணையாக மிரட்டும் வில்லன் கதாபாத்திரத்தில் சிவராஜ்குமார் நடிக்கவிருக்கிறாராம். இதனால்தான் அந்த பேட்டியில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்று கூறியுள்ளார். ஆனால் இதை அவர் உறுதிப்படுத்தவில்லை என்றாலும் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து இந்த செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை விரைந்து முடித்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்த தலைவர் 169 படத்திற்கான அடுத்த அடுத்த அப்டேட் வந்து ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்த காத்திருக்கிறது.

- Advertisement -

Trending News