தலைவர் 169 படத்தின் டைட்டிலை தேர்வு செய்த ரஜினி.. அதற்குள் படாதபாடு பட்ட நெல்சன்

பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன் ரஜினியின் தலைவர் 169 படத்தை இயக்கயுள்ளார். பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்கள் பெற்றதால் இப்படத்தில் ரஜினி சில மாற்றங்களை கூறியுள்ளார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தில் ரஜினி நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் முன்னணி நடிகர்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க தயங்கி வந்தனர். ஆனால் இப்போது ஹீரோக்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதை மக்கள் பெரிதும் பாராட்டுகின்றனர்.

அவ்வாறு விஜய் சேதுபதி தற்போது துணிந்து பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் மிரட்டி வருகிறார். இதைத்தொடர்ந்து தற்போது சூர்யாவும் விக்ரம் படத்தில் வில்லனாக அனைவரையும் மிரள வைத்திருந்தார். சமீபத்தில் விக்ரம் படத்தை பார்த்த ரஜினிகாந்த் கமலை போனில் அழைத்து பாராட்டினார்.

இதனால் ரஜினியும் இப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதால் அதற்கு ஏற்றாற்போல் கிட்டத்தட்ட முப்பது டைட்டில்களை நெல்சன் தயார் செய்துள்ளார். ஆனால் அதில் ரஜினிக்கு பிடித்தவாறு ஒரு டைட்டில் கூட இல்லையாம்.

பிறகு “கிரிமினல்” என்னும் டைட்டிலை ஆப்ஷனலாக ரஜினி செலக்ட் செய்துள்ளாராம். இப்போது கிட்டத்தட்ட இந்த டைட்டில் தான் ரஜினிகாந்த் இறுதியாக ஓகே சொல்லுவார் என்ற நம்பிக்கையில் நெல்சன் சந்தோசமாக உள்ளாராம். மேலும் ரஜினி இந்த டைட்டிலை ஆப்ஷனலாக தான் சொல்லியுள்ளார் என்பதால் படத்தின் டைட்டில் மாறவும் வாய்ப்புள்ளது.

மேலும் மிக விரைவில் இப்படத்துக்கான டைட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். ரஜினி ஏற்கனவே சந்திரமுகி படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகளில் சில நிமிடங்கள் வேட்டையன் என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் தலைவர் 169 படமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்