தலைவர் 169 காட்டுத் தீயாக பரவும் ரிலீஸ் தேதி.. விட்டதை பிடிக்கும் வெறியில் நெல்சன்

கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற நெல்சன் பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் அதை இழந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். விஜய் நடிப்பில் கடந்த மாதம் வெளியான அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சில எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது.

படத்தில் இடம்பெற்றிருந்த பாதி காட்சிகள் நடைமுறைக்கு சாத்தியமில்லாத வகையில் இருப்பதாக பலரும் தெரிவித்து வந்த நிலையில் தற்போது அந்த விஷயமே சர்வதேச அளவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இதனால் நெல்சன் பல கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாகி வருகிறார்.

இந்நிலையில் நெல்சன் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து தலைவர் 169 படத்தை இயக்க இருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

ஆனால் பீஸ்ட் திரைப்படம் வெளியான பிறகு அந்த எதிர்பார்ப்பு தற்போது குறைந்துள்ளது. விஜய்க்கு ஏற்பட்ட நிலை ரஜினிக்கும் வந்துவிடுமோ என்று சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் இப்போது பெரும் கவலையில் இருக்கின்றனர். இதையெல்லாம் பார்த்த தயாரிப்பு நிறுவனம் தற்போது நெல்சனை கூடுதல் கவனத்தோடு இந்த படத்தை இயக்கவேண்டும் என்று கூறியிருக்கிறது.

இந்நிலையில் தலைவர் படத்தின் ரிலீஸ் எப்போது என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. அதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் பிறந்த தினமான டிசம்பர் 12 அன்று அதன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

மேலும் அடுத்த வருடம் ஏப்ரல் 14 அதாவது தமிழ் புத்தாண்டு தினத்தன்று இந்த படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அதனால் நெல்சன் தற்போது கதையை கவனமாக செதுக்கிக் கொண்டிருக்கிறார். இதற்காக அவர் ரஜினியை வாரத்திற்கு ஒரு நாள் சந்தித்து கதையை பற்றி கலந்து பேசி வருகிறாராம்.

இந்தப் படத்தில் எந்த தவறும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக அவர் மிகவும் கவனமாக ஒவ்வொரு விஷயத்தையும் செய்து வருகிறார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

- Advertisement -